எச்.ராஜா மீது தொடரப்பட்ட வழக்குகள் எதையுமே ரத்து செய்ய முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

 
h.raja

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் தள்ளுபடி  செய்யப்பட்டுள்ளது.

h.raja

கடந்த 2018-ம் ஆண்டு  பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பப் பெண்களை தரக்குறைவாக பேசியதாக வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் 11வழக்குகள் பதியப்பட்டன. இவற்றை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா மனுதாக்கல் செய்தார்.இந்நிலையில்  பெரியார் சிலையை உடைப்பேன் என பதிவிட்டது, திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து தெரிவித்தது, அறநிலையத்துறை அதிகாரிகளின் குடும்பப் பெண்கள் குறித்து தவறாக பேசியது என பாஜகவின் எச்.ராஜா மீது தொடரப்பட்ட வழக்குகள் எதையுமே ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

Highcourt

பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து, 3 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கிழமைநீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இவ்வாறு எச்.ராஜா பேசுவது முதல் முறை அல்ல. அவருடைய பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்க கூடிய வகையில் உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அவர் பேசியுள்ளதால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.