"நாங்கள் தான் எஜமானர்கள்! யாருக்கும் பயப்படவில்லை"- செல்லூர் ராஜூ
மதுரை அலங்காநல்லூர் கோவில் பாப்பாகுடி அருகே உள்ள சமுதாயக்கூடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “எங்களை பொறுத்தவரை மதசார்பற்ற கட்சிகளுடனே கூட்டணி. எங்கள் கொள்கையுடன் யார் வருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி. எங்களுடைய ஒரே எதிரி திமுக. நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. எடப்பாடியை யார் முதல்வராக ஏற்று கொள்கிறாரோ அவர்களுடன் கூட்டணி. அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள் தான் எஜமானர்கள்
அதிமுகவை ஆளும் கட்சியாக மாற்றுவதற்கு, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவதற்கு யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி என எடப்பாடி பழனிச்சாமி சூசகமாக சொல்லியுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதக வெளியேறுகிறதா? என்ற கேள்வியை மதுரையின் மருமகளான பிரேமலதாவிடம் கேளுங்கள். திமுகவால் எங்கள் மீது உண்மையான அக்கறையுடன் இருக்க முடியாது. எங்களுக்கும் திமுகவுக்கும் வரப்பு தகராறெல்லாம் கிடையாது. கொள்கை முரண்பாடு தான். நாங்கள் முன்பை விட இப்போது திடமாக இருக்கிறோம்” என்றார்.


