"2027 பிப்ரவரியில் மதுரையில் எய்ம்ஸ்"- ஆர்டிஐ-ல் தகவல்

 
madurai aiims madurai aiims

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027-ம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்டிஐயில் தகவல் வெளியாகியுள்ளது.

BJP president says Madurai AIIMS is 95% complete — but it seems to be 100%  invisible

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜாவின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விக்கு தற்போது எய்மஸ் மத்திய நிர்வாகம்  பதில் கடிதம்  வழங்கப்பட்டுள்ளது . மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவுற்று வருகின்ற 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் முதற்கட்டமாக ரூ.1118.35 கோடிக்கு முதற்கட்ட கட்டுமான பணிகள் துவக்கம் எனவும் ஆர் டி ஐ மூலம் தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மட்டுமன்றி தென் மாவட்ட மக்களின் கனவாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாக அலுவலகம் துவங்கப்பட்டு கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா ஆர் டி ஐ ல் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மதுரை எய்ம்ஸின் மத்திய பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில், மதுரை எய்ம்ஸ் இன் கட்டுமான ஒப்பந்தத்தின்படி தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள், உணவு கூடம், வெளி நோயாளிகள் பிரிவு, சேவை பிரிவு கட்டிடங்கள் ஆகியவற்றிற்கான கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.  சென்னையைச் சார்ந்த ( L&T ) லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் மத்திய எய்ம்ஸ் நிர்வாக குழு 1118.35 கோடிக்கு (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 22 மே 2024 அன்று கட்டுமானம் தொடங்குவதற்கு ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவ முதல் கட்ட பணிகள் 33 மாதங்களில் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Madurai AIIMS construction will be over by 2028: Ma Su

மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான திட்ட மதிப்பீடு 2021.51 கோடிகள் ஆக நிர்ணயம் செய்யப்பட்டு 33 மாதங்களில் மொத்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம்   2,18,927 ச. மீ பரப்பளவில் மருத்துவமனை கட்டிடங்கள், மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள், விடுதிகட்டிடங்கள், ஆசிரியர்கள் குடியிருப்புகள், உணவகங்கள், விளையாட்டுக் கூடங்கள் பணிகள் துவங்கிகட்டப்பட்டு வருகின்றது. தற்காலிக கட்டிடங்களாக   திட்ட அலுவலகம், சேமிப்பு கிடங்குகள், காங்கிரீட் தயாரிப்பு ஆலை, மெடிக்கல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான கட்டிடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது‌ என அந்த ஆர்டிஐயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் கடந்து வந்த பாதைகள்

1. தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ்  அறிவிக்கப்பட்ட தேதி 28.02.2015.

2. மதுரை தோப்பூரில் இடம் தேர்வு 18.06.2018

3. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய தேதி 17.12.2018

4. மதுரை எய்ம்ஸ்  அடிக்கல் நாட்டப்பட்ட தேதி  27.01.2019

5. சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடங்கப்பட்டது  25.11.2019

6. மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு இடம் ஒப்படைக்கப்பட்ட தேதி 03.11.2020

7. நிர்வாக இயக்குனர் அறிவிப்பு 22.02.2021

8. கடன் ஒப்பந்தம் கையெழுத்து 26.03.2021


தென்மாவட்ட மக்களின் கனவு திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிந்து விரைவில் மக்கள் செயல்பாட்டிற்கு வரும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தற்போது வெளியான தகவல்கள் எய்ம்ஸ் திட்டத்திற்கான பணிகள் விரைவில் முடிவுவதற்கான அறிகுறிகளாக தெரிகின்றது