‘மாமன்னன்’ திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு

 
tn

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

maamannan

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் மாமன்னன். இப்படம் திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ளது. நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மாமன்னன் திரைப்படம் சாதிய ரீதியிலான உணர்வுகளை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி,   உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.  இந்நிலையில் 'மாமன்னன்' படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. திரைப்பட தணிக்கைத்துறை அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

madurai high court

அத்துடன் திரைப்படம் மக்கள் பார்க்கவே,  இரண்டு நாட்களில் அதனை மறந்து விடுவார்கள். சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் காவல்துறையினர் பார்த்து கொள்வார்கள். பேச்சுரிமை, கருத்துரிமை அனைவருக்கும் உள்ளது என கூறி அவசர வழக்காக விசாரிக்க மறுத்துள்ளனர்.