மணிப்பூர் தொடர்பான பிரதமர் மோடியின் முதலை கண்ணீரை உலகமே பார்த்து சிரிக்கிறது - சு.வெங்கடேசன்

 
venkatesan

மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் பேசிய வசனத்திலிருந்து சிந்திய முதலைக் கண்ணீரை உலகமே பார்த்து சிரிக்கிறது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். 

மணிப்பூரில் சூகி பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து செல்லும் காணொலி இணையத்தில் வைரலானது. அந்த பெண்கள் மர்மநபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில் இரு பெண்களும் கதறி அழுவும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று முதல் முறையாக பேசி இருந்தார். இந்த நிலையில், பிரதமர் முதல் முறையாக மணிப்பூர் சம்பவம் குறித்து வாயை திறந்தது தொடர்பாக டெலிகிராப் இதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த இதழை தந்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மதுரை எம்.பி. சு,வெங்கடேசன்,  79 நாட்கள் ஆகி இருக்கிறது 56 இன்ச் அகலத் தோலைக் கிழித்து வலியையும், வேதனையையும் உணர வைப்பதற்கு... மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அம்பலம் ஆன பிறகு...பிரதமர் பேசிய வசனத்திலிருந்து சிந்திய முதலைக்கண்ணீரை உலகமே பார்த்து சிரிக்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.