மதுரை போஸ்டரால் பரபரப்பு : நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்..!!

 
1

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித், தன் திரைப்பயணம் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையிலும், தன் குடும்பத்துக்காக செலவிடும் நேரத்தாலும் ரசிகர்களை ஈர்த்து தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.அஜித் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ள நிலையில், தங்களது க்யூட்டான குடும்ப புகைப்படங்களை ஷாலினி தன் இணைய பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.


நடிகர் அஜித்திற்கு (மே 1) பிறந்தநாள். இந்நிலையில் மதுரையில் அவரது ரசிகர்கள், அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

அதில், “ தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான். தமிழக மக்களை அறிவார்ந்த சமூகமாக மாற்ற விரைவில் முடிவெடு தல வா!” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.



இதே போல் கடந்த சில வருடங்களுக்கு முன் கூட மதுரையில் உள்ள அவரது ரசிகர்கள், அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை ஒட்டினர். 

அந்த போஸ்டரில் மக்களால் நீங்கள்.. மக்களுக்காகவே நீங்கள்... உங்கள் சேவை இப்போது தமிழ்நாட்டுக்கு தேவை என தலைமைச் செயலக புகைப்படத்துடன் போஸ்டர்களை ஒட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது