மதுரை ரயில் விபத்து - 2வது நாளாக தடயவியல் துறை அதிகாரிகள் சோதனை

 
tn

மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக தடயவியல் துறை அதிகாரிகள் இன்று  2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் 60க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு அருகே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் திடீரென நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். தடையை மீறி சிலிண்டரை ரயிலில் எடுத்து சென்று சமையல் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தெற்கு ரயில்வே தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.  தீ விபத்து தொடர்பாக தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி இன்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தவுள்ளார்.  

tn

இந்த நிலையில், ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக தடயவியல் துறை அதிகாரிகள் இன்று  2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்துக்கான காரணம் குறித்து அறிவதற்காக தடயவியல் துறையினர் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி சிலிண்டரை ரயிலில் எடுத்து சென்று சமையல் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.