"விஜய் ரசிகர்களின் உயிரை பணயம் வைத்து அரசியலுக்கு வந்திருக்கிறார்”- பரம்பொருள் மகாவிஷ்ணு விமர்சனம்

 
s s

நடிகர் விஜய் கரூரில் 41 பேர் உயிரிழந்த பொழுது ஹீரோ போன்று களத்தில் நின்று பணியாற்றி இருக்க வேண்டும் எம ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே பொய்கை கரைபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் சிறப்பு விருந்தினராக சர்ச்சைக்குரிய பேச்சாளரும், ஆன்மீக சொற்பொழிவாளருமான மகாவிஷ்ணு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி உள்ளது வரவேற்கத்தக்கது. அவருக்காக கூடிய கூட்டத்தில் கரூரில் 41 பேர் உயிரிழந்த பொழுது நடிகர் விஜய் களத்தில் நின்று ஹீரோ போல் பணியாற்றி இருக்க வேண்டும். அதை விடுத்து அவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஹீரோவுக்கான அழகு அல்ல, நடிகர் விஜய் தன்னுடன் இருப்பவர்களை கவனமாக கண்காணித்துக் கொள்ள வேண்டும். விஜய் இன்னும்ுதுணிச்சலாக செயல்பட வேண்டும். உங்களை நம்பி வரும் ரசிர்களின் உயிரை பணயம் வைக்கிறீர்கள். ராஜராஜ சோழன் குறித்து சமீபத்தில் சிலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். விமர்சிப்பவர்களை தான் விமர்சிக்க விரும்பவில்லை என்றாலும் ராஜா ராஜ சோழன் ஆன்மிகத்து ஆற்றிய வரலாறுகளை தெரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.