தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று - ஓபிஎஸ் ட்வீட்

 
rg

தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி ஓபிஎஸ் அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

rg

 மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது, மேலும் இது இந்தியாவின் மூன்று தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும் . UN பொதுச் சபை 15 ஜூன் 2007 அன்று ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது, அதில் அவர் ஒரு அகிம்சை சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் அக்டோபர் 2 ஆம் தேதி சர்வதேச அகிம்சை தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தது .  


இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "இந்தியத் திருநாடு சுதந்திரம் பெறுவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவரும், தீண்டாமை, மது, சூதாட்டம், சாதி பாகுபாடு, பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய தீமைகளை ஒழிக்கப் பாடுபட்டவருமான தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று. அவருக்கு எனது மரியாதையினையும், வீர வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

அவரது தியாகம் என்றென்றும் இந்திய மக்களின் இதயங்களில் வீற்றிருக்கும்."என்று குறிப்பிட்டுள்ளார்.