மகாவீர் ஜெயந்தி: இறைச்சிக் கடைகள் நாளை மூடல்
Apr 20, 2024, 15:03 IST1713605624231
மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு நாளை சென்னையில் இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள இறைச்சிக் கூடங்களும் நாளை (ஏப்.21) மூடவேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் இறைச்சி, மீன்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை ஏற்கெனவே மதுபான கடைகளை நாளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.


