"பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது; யாரும் நன்கொடை வழங்க வேண்டாம்"- மகாவிஷ்ணு

 
 "பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது"- மகாவிஷ்ணு  "பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது"- மகாவிஷ்ணு

பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது,யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் என மாற்றுத் திறனாளிகள் குறித்தும்  முன் ஜென்ம பயன் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கிய மகாவிஷ்ணு அறிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு  மோட்டிவேஷனல் ஸ்பீச்  வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர். ஆனால் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு  மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக,  ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும்,  இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது,யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் என மாற்றுத் திறனாளிகள் குறித்தும்  முன் ஜென்ம பயன் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கிய மகாவிஷ்ணு அறிவித்துள்ளார். பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது என அறிவிப்பதில் நிம்மதி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள மகாவிஷ்ணு, எனக்கு எந்தவித வேதனையும் கொண்ட முடிவாக இது இல்லை என்றும்,  சொந்த ஆன்மீக வளர்ச்சியை கருத்தில் கொண்டு தெளிவான தீர்மானம் எடுத்துள்ளேன், இப்போது தான் ஒரு புதிய புள்ளியை அடைந்திருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.