தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ்
ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பிரமோஷனில் மாடலாக நடித்த மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நில மோசடி புகாரில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாய் சூர்யா லெவலப்பர்ஸ் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மோசடி செய்துவிட்டதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அந்நிறுவனத்தின் பிரமோஷனில் ஈடுபட்டதற்காக நடிகர் மகேஷ்பாபு-வுக்கு ரூ.3.4 கோடி வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் அடிப்படையில் நடிகர் மகேஷ்பாபு-வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர், இல்லாத மனைகளுக்கு ரூ. 34.8 லட்சம் கொடுத்துவிட்டு மோசடி செய்யப்பட்டதாகக் கூறி புகார் அளித்த நிலையில் மகேஷ்பாபு மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.


