கோவை ஜோஸ் ஆலுகாஸ் நடைக்கடை கொள்ளை - முக்கிய குற்றவாளி கைது!

 
covai robery

கோவை ஜோஸ் ஆலுகாஸ் நடைக்கடை கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான விஜய் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை காந்திபுரம் பகுதியில் ஜோஸ் ஆலுகாஸ்நகைக்கடையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவில் கொள்ள சம்பவம் நடந்தது. இது தொடர்பாக ஜோஸ் ஆலுகாஸ் சார்பில் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தத்னர்.  நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிட்டி போலிஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், “கோவை நகை கொள்ளை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். கணவன் மனைவி இணைந்து கொள்ளையடித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தர்மபுரியைச் சேர்ந்த விஜய் மற்றும் அவரது மனைவி கொள்ளை சம்பவத்தில் இணைந்து ஈடுபட்டுள்ளனர். மனைவி கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து மூன்று கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன, தப்பியோடிய விஜயை தேடும் பணி நடைபெற்ற வருகிறது என்றார்.

jos alukas

இந்த நிலையில், கோவை ஜோஸ் ஆலுகாஸ் நடைக்கடை கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டுவந்த முக்கிய நபரான விஜய் கைது  செய்யப்பட்டுள்ளார். 4.6 கிலோ நகைகள் கொள்ளை வழக்கில் விஜயின் மனைவி நர்மதா, மாமியார் யோகராணி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பதுங்கியிருந்த விஜயை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மாலை அணிந்து பக்தர் போல வேடமிட்டு சுற்றி திரிந்த விஜயை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.