புதுக்கோட்டை, குமரி மாவட்ட திருக்கோயில்களின் நிர்வாக மேம்பாடு - முதல்வரின் அதிரடி நடவடிக்கை!!

 
stalin

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில்  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோவில்களின் நிர்வாக மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்பட்டு வரும்,  ஆண்டுக்கான அரசு மானியத்தை 1 கோடி ரூபாயில் இருந்து 6 கோடி ரூபாயாக உயர்த்தி அதற்கான காசோலையை,  சுசீந்திரம் கன்னியாகுமரி தேவஸ்தான திருக்கோவில்களின் இணை ஆணையர் /செயல் அலுவலர் ஞானசேகரிடம் வழங்கினார்.

stalin

மேலும் புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோவில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை ஒரு கோடி ரூபாயில் இருந்து 3 கோடியாக உயர்த்தி அதற்கான காசோலையை புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இணை ஆணையர் தென்னரசு மற்றும் செயல் அலுவலர் சரவணன் ஆகியோரிடம் வழங்கினார்.2021- 22 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்கான வழங்கப்படும் அரசு மானியம் 3 கோடி ரூபாயில் இருந்து 6 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோவில் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக அரசு மானியம் ஒரு கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எனவே கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்காக வழங்கப்படும் அரசு மானியத்தை மூன்று கோடி ரூபாயில் இருந்து 6 கோடி ரூபாயாக உயர்த்தி,  கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.  

cm stalin

அதேபோல் புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் 225 திருக்கோவில்கள் உள்ள நிலையில் அதற்கான பராமரிப்பு தொகை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஒரு கோடி ரூபாயாக உயர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.  தற்போது விலைவாசி ஏற்றத்தை கருத்தில் கொண்டு அரசு மானியத்தில் ஒரு கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தி கடந்த மாதம் 12-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டதுஎனவே இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்கான வழங்கப்படும் அரசு மானிய தொகை  ரூ.6 கோடி ஆகவும் , புதுக்கோட்டை திருக்கோயில் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக வழங்கப்படும் அரசு மானியம் ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டு இன்று அதற்கான காசோலைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.