காலி சிலிண்டரை மாற்றும் போது பெரும் விபத்து- இளம்பெண் உயிரிழப்பு
Oct 11, 2024, 15:43 IST1728641624974
சென்னை மடிப்பாக்கத்தில் சிலிண்டர் விபத்தில் தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகரைச் சேர்ந்த ஆசிரியை வின்சி புளோரா வீட்டில், கடந்த இரு தினங்களுக்கு முன் சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இதில், வின்சிக்கு உடல் முழுவதும் 60 சதவீத தீக்காயமும், சிலிண்டர் கொடுத்த மணிகண்டனுக்கு 45 சதவீத தீக்காயமும் ஏற்பட்டது. இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் வின்சி ;சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். காலி சிலிண்டரை மாற்றும் போது இந்த விபத்து நேர்ந்ததாக தெரிகிறது.
சேலத்தை சோ்ந்த வின்சி புளோரா, சென்னையில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இதற்காக குபேரன் நகரில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததால் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.


