"7.5 சதவீத இடஒதுக்கீடு" உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு மநீம வரவேற்பு!

 
kamal

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த அதிமுக ஆட்சி நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.  இவ்வழக்குகளில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்து வந்தது.  தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியும் என்றும் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு  செல்ல முடியாது என்றும் அதனால்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக சட்டம் இயற்றப்பட்டது என்று அரசு தரப்பில்  வாதிடப்பட்டது.

Madras Court

இட ஒதுக்கீட்டிற்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பள்ளிகள் இருவகையாக பிரிப்பது சட்டப்படி சரியானது. பின்தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக சட்டம் இயற்றப்பட்டதாகும் தெரிவிக்கப்பட்டது.  இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்ட நிலையில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இதை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

tn

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு செல்லும் எனும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அதே நேரம் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் கருத்தையும் தமிழக அரசுக்கு நினைவுறுத்த  விரும்புகிறது" என்று பதிவிட்டுள்ளார்.