இயக்குநர் சித்திக் மரணம் - விஜயகாந்த் இரங்கல்

 
tn

இயக்குநர் சித்திக் மரணமடைந்த நிலையில் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , "பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக் அவர்கள், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

நடிகர் விஜய் பட இயக்குநர் கவலைக்கிடம்

நான் நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படத்தில் , இயக்குனர் சித்திக் அவர்களுடன், பணியாற்றிய இனிமையான தருணங்களை நினைவுகூர்கிறேன். அவரது இழப்பு திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். 

vijayakanth

இயக்குனர் சித்திக் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரைத் துறையினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன். " என்று குறிப்பிட்டுள்ளார்.