4 நாட்களுக்கு பிறகு கடலுக்குச் சென்ற மாமமல்லபுரம் மீனவர்கள்..!!

 
4 நாட்களுக்கு பிறகு கடலுக்குச் சென்ற மாமமல்லபுரம் மீனவர்கள்..!! 4 நாட்களுக்கு பிறகு கடலுக்குச் சென்ற மாமமல்லபுரம் மீனவர்கள்..!!

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்த நிலையில், மாமல்லபுரம் சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் 4 நாட்களுக்குப் பிறகு இன்று கடலுக்குச் சென்றனர். 
 
வங்கக்கடலில் உருவாகியள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.  நாகை, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில்  புயல் எச்சரிக்கை கூண்டுகள் கூட ஏற்றப்பட்டன. இதனால்  பாதுகாப்புக் கருதி  மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  

fishermen

இதன்பேரில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி, மாமல்லபுரம், கொக்கிலிமேடு, கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் மீனவர்குப்பம், உய்யாலிகுப்பம், கடலூர் பெரியகுப்பம், சின்னகுப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில்,   காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் நெல்லூர் இடையே நேற்று கரையைக் கடந்ததால்,  கடல் சீற்றமும் சற்று குறைந்தது.  இதனையடுத்து  மீனவர்கள் இன்று காலை மீன் பிடிப்பதற்காக  2,500க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் வழக்கம்போல்  கடலுக்கு சென்றனர். இதில், சிறிய வகையை சேர்ந்த பாறை, நண்டு, யெரா உள்பட பல்வேறு வகையான மீன்களை பிடித்து வந்தனர்.