மம்தா பானர்ஜி பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!!

 
mamata stalin

மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி  பிறந்தநாளையொட்டி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

mamata
இந்திய அரசியலில்  வெற்றி வாகை சூடிய  பெண் தலைவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே.. அவர்களில்  மிக முக்கியமானவர் மம்தா பானர்ஜி.  இன்று இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர்களில் அவர் ஒருவர் மட்டுமே பெண் ஆவார்.. தனது 30 ஆண்டுகால அரசியல் வரலாற்றில்  பல தலைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் மம்தா.. இன்று வங்கத்துப் புலி என்று கொண்டாப்படும் அவர், அரசியலில் இத்தனை செல்வாக்குகளை பெற  கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை..தனது இளமைப் பருவம் முதலே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த, 1970 களில் தன்னை அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொண்டார்.  முதலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர்,  1976 ஆம் ஆண்டு கட்சியின் மாநில செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.  

Mamata

பின்னர் 1984ஆம் ஆண்டு தனது 29 வயதில் முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். 1989 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த அவர்,  துவண்டு போகாமல் மீண்டும் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1992ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.  மம்தா தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.  தற்போது 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  தொடர்ந்து ஆறு மாதத்திற்குள்  மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த மம்தா பானர்ஜி, பவானிபூர்  தொகுதி இடைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.  இந்த சூழலில் மம்தா பானர்ஜி இன்று தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


 


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மேற்கு வங்க முதலமைச்சரும் எனது அன்பிற்கினிய சகோதரியுமான செல்வி மம்தா பானர்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலனும், மகிழ்ச்சியும், வெற்றிப்படிகளும் நிறைந்து, இந்தியாவில் மக்களாட்சியின் மலர்ச்சிக்குப் பங்காற்றிடும் வகையில் இந்த ஆண்டு தங்களுக்கு அமைந்திட விழைகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார் .