மம்தா பானர்ஜிக்கு லேசான காயம்...ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார்..!

 
1

மேற்கு வங்காள முதல் அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மாநில உலகம் சூறாவளி சொத்து பயணம் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் துர்காபூரில் இருந்து அசன்சாலுக்கு பிரசாரத்திற்கு புறப்பட்டார்.

தயாராக நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டருக்குள் படிக்கட்டு வழியாக ஏறிச்சென்ற அவர் இருக்கை ஒன்றில் அமர முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

உடனடியாக அவருடைய பாதுகாவலர்கள் மம்தா பானர்ஜியை மீட்டு, முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின் தேர்தல் பிரச்சாரத்திற்காக அன்சாலுக்கு அதே ஹெலிகாப்டரில் அவர் புறப்பட்டு சென்றார்.

கடந்த மாதம் மம்தா பானர்ஜி அவருடைய வீட்டிற்குள் நடந்து சென்ற போதும் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அப்போது அவருடைய தலை கண்ணாடி ஷோகேஸ் மீது இடித்து விட்டதால் நெற்றியில படுகாயம் அடைந்தார்.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் கிழக்கு பர்தான் மாவட்டத்தில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது கார் விபத்தில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மம்தா பானர்ஜியின் வாகன அணி வகுப்பு வரிசை சென்றபோது, 200 கிலோமீட்டர் வேகத்தில் வேகமாக வந்த கார் ஒன்று குறுக்கிட்டது.

உடனே சமயோசிதமாக செயல்பட்ட கார் டிரைவர், அதிரடியாக 'பிரேக்' போட்டு காரை நிறுத்தினார். இருப்பினும் மம்தாபானர்ஜியின் தலை "டேஷ் போர்டி"ல் இடுத்துக்கொண்டது. இந்த விபத்திலும் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.