இளம்பெண்ணின் அந்தரங்க படங்களை வைத்து 40 லட்சம் பணம் பறித்த இளைஞர் கைது..!

 
1

தேனி சிவராம் நகரில் வசித்து வருபவர் 34 வயதான இளைஞர் ராஜமாணிக்கம். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் தேனி பாரஸ்ட் ரோடு பகுதியில் வசித்த இளம்பெண்ணுடன் பழகியுள்ளார். அப்போது இளம்பெண்ணின் அந்தரங்க படங்களை அவருக்கு தெரியாமல் செல்போனில் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தேனியில் படித்து முடித்த இளம்பெண் சென்னையில் வேலை செய்த போது உடன் பணிபுரிந்த  ஒருவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் நெருக்கமாக இருந்த படங்கள் இளம்பெண்ணின் செல்போனில் இருப்பதை அறிந்த ராஜமாணிக்கம் அவற்றையும் தனது செல்போனுக்கு மாற்றியுள்ளார்.

பெண்ணின் அந்தரங்க படங்களை வைத்து 40 லட்சம் பணம் பறித்த இளைஞர் கைது

சில வருடங்களுக்கு பின் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணுக்கு திருமணமான பின், தன்னிடம் உள்ள அந்தரங்க படங்களை அவரிடம் காண்பித்து பணம் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி உள்ளார். இதனால் அச்சமடைந்த இளம்பெண் ராஜமாணிக்கத்திற்கு பல்வேறு தேதிகளில் ஃபோன் பே, ஜிபே மற்றும் வங்கி கணக்கு மூலமாக 40 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார்.

இருப்பினும் பணத்தை பெற்றுக் கொண்ட ராஜமாணிக்கம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்ததால் சோகத்துடன் இருப்பதை அறிந்த அவரது தாயார் ( லதா (54) ) தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் ராஜமாணிக்கத்தை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.