சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

 
seeman seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

seeman

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சீமான் தலை விரைவில் துண்டாக்கப்படும். மேலும் நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும், கூடிய விரைவில் நாதக கட்சி அலுவலகத்தில் இரங்கல் செய்தி வரும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை சைபர் கிரைம் போலீசார் போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.