வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் கைது..!

 
வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் கைது..! வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் கைது..!

வேளச்சேரி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

அரியலூர் மாவட்டம் திருமழாபாடியைச் சேர்ந்த ஜோதிவேல்.  62 வயதாகும் இவர் மனைவியை கொலை செய்த வழக்கில் சிறைக்குச் சென்று வந்துள்ளார்.  சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர் உறவினர்கள் யாரும் இவரை கண்டுகொள்ளவில்லை. அதேநேரம் எங்கும் வேலையும் கிடைக்கவில்லை எனக்கூறப்படுகிறது.  சுய தொழில் தொடங்க உதவி கேட்டு அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்ததாகவும், ஆனால் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என்கிறார். அத்துடன் தற்போதைய முதலமைச்சர் கடந்த 2006 -11ல் துணை முதலமைச்சராக  இருந்தபோது அவரை சந்திக்கவும் முயற்சி செய்தும், சந்திக்க முடியாமல் போனாதாக கூறப்படுகிறது.  

சென்னை பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்

இந்த நிலையில் எந்த வேலையும் கிடைக்காத நிலையில் விரக்தியில்,  ஜோதிவேல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.  இதன்காரணமாக  விஷம செயல்களில்  ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. அதுபோலத்தான் வேளச்சேரி ரயில் நிலையத்திற்கும் ஜோதிவேல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்.  இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.