பிறந்து 2 மணி நேரமே ஆன நாய்க்குட்டியை அடித்துக் கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு

 
ச ச

சென்னையில்பிறந்து இரண்டு மணி நேரமே ஆன நாய்க்குட்டியை  அடித்துக் கொன்ற நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை பி.வி கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (23). பல வருடங்களாக தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார்  இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த சங்கர்(37) என்பவருடைய வீட்டில் தெரு நாய் ஒன்று ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர் ஒரு நாய்க்குட்டியை வீட்டின் மேற்கூறையிலும் மற்றொரு நாய்க்குட்டியை பாலித்தீன் கவரை தரையில் அடித்து நசுக்கி உள்ளார். நாய் குட்டியின் சத்தம் கேட்டு லாவண்யா பதறி ஓடி வந்துள்ளார்  அப்போது அந்த நாய்க்குட்டியை குப்பை தொட்டியில் சங்கர் வீசியதை பார்த்துள்ளார். உடனடியாக லாவண்யா எதற்காக நாய்க்குட்டியை இதுபோன்று செய்தீர்கள் எனக் கேட்டுள்ளார் 

அதற்கு சங்கர் ஆபாசமான வார்த்தைகளால் பேசி அங்கிருந்து சென்றுள்ளார். இதனை அடுத்து லாவண்யா ப்ளூ கிராஸ் அமைப்பிற்கும் ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாய்குட்டியை மயிலாப்பூரில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனைக்கு லாவண்யா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதல் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே நாய்க்குட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது தொடர்பாக லாவண்யா அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.