மார்ச் 8ம் தேதி உள்ளூர் விழுமுறை : மாசிக்கொடை திருவிழாவையொட்டி கன்னியாகுமரி ஆட்சியர் உத்தரவு..

மார்ச் 8ம் தேதி  உள்ளூர் விழுமுறை : மாசிக்கொடை திருவிழாவையொட்டி கன்னியாகுமரி ஆட்சியர் உத்தரவு..

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்  மாசிக் கொடை திருவிழாவை ஒட்டி கன்னியாகுமரியில்  மார்ச் 8 ஆம் தேதி  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் மிகவும் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில்  அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். அதிலும் பெண்கள் தலையில் இருமுடி கட்டை சுமந்து வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வர்.  அதனால் இது பெண்களின் சபரிமலை என்றே அழைக்கப்படுகிறது.

மார்ச் 8ம் தேதி  உள்ளூர் விழுமுறை : மாசிக்கொடை திருவிழாவையொட்டி கன்னியாகுமரி ஆட்சியர் உத்தரவு..

இந்த கோயிலில் ஆண்டுதோறும்  மாசி மாதத்தில்  திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.  அந்தவகையில் இந்த ஆண்டு மாசி கொடை திருழுவிஆ . பிப்ரவரி 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான மாசி கொடை திருவிழா மார்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகையால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மார்ச் 8ம் தேதி  உள்ளூர் விழுமுறை : மாசிக்கொடை திருவிழாவையொட்டி கன்னியாகுமரி ஆட்சியர் உத்தரவு..

அதனபடி  மார்ச் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி  மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அரசின் முக்கிய பணிகளுக்காக  தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்களில்  மட்டும்  தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என்றும்,  இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 9ம் தேதி 2வது சனிக்கிழமை  பணி நாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே மார்ச் 4ம் தேதி சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர்  பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.