“பாஜகவோடு எடப்பாடி பழனிசாமி தவிர வேறு யாரும் கூட்டணிக்கு செல்ல தயாராக இல்லை”- மாணிக்கம்தாகூர்

 
“வடிவேலு இல்லாத நாட்களில் நமக்கு பொழுதுபோக்கு அண்ணாமலை மட்டும்தான்” –  எம்.பி. மாணிக்கம் தாகூர் “வடிவேலு இல்லாத நாட்களில் நமக்கு பொழுதுபோக்கு அண்ணாமலை மட்டும்தான்” –  எம்.பி. மாணிக்கம் தாகூர்

பாஜகவோடு எடப்பாடி பழனிச்சாமி தவிர வேறு யாரும் கூட்டணிக்கு செல்ல தயாராக இல்லை, யாருக்கு எல்லாம் சிபிஐ வழக்கு இருக்கிறதோ அவர்கள் தான் பாஜகவோடு கூட்டணிக்கு சேர்கிறார்கள் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெர்வித்துள்ளார்.

“பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்” – மாணிக்கம் தாகூர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த ஏப்ரல் மாதம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள படந்தால் சந்திப்பில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் அடிக்கல் நாட்டினர். இந்த நிலையில் சாத்தூர் படந்தால் சந்திப்பில் நடைபெறும் மேம்பால பணிகளை இன்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஆய்வின் போது நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளிடம் மேம்பாலப் பணிகள் குறித்து கேட்டறிந்த மாணிக்கம் தாகூர் பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி, “வரும் 26ம் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்த்த படுவதை கைவிட வேண்டும். மேலும் ரயில் கட்டணம் உயர்வை பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பின் மத்திய அரசு அறிவித்திருக்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ரயில் கட்டண உயர்வை அறிவித்தால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்போம் என்பதற்காக பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததற்கு பின்னர் அறிவித்து இருப்பது மிகவும் கண்டனத்துக் குரியது. ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். திருநகர் வாக்குச்சாவடியில் இரண்டு வாக்காளர்களின் பெயர் ஹிந்தியில் அச்சடிக்கப்பட்டு இருப்பதை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என்ன பதில் சொல்லப் போகிறார்? தமிழக மக்கள் கள்ள ஓட்டு போடும் தரம் தாழ்ந்த செயல்களில் என்றைக்கும் ஈடுபட்டது கிடையாது.

100 நாள் வேலை திட்டத்தை திருத்தியதன் விளைவாக பாஜக தமிழகத்தில் எந்த ஒரு கிராமத்து மக்கள் பாஜகவினரை விட மாட்டார்கள். மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி 2வது முறையாக மகாத்மா காந்தியை படுகொலை செய்த பாவ கரைகளோடு பாஜகவினர் எப்படி கிராமத்திற்குள் நுழைகிறார்கள் என்று பார்ப்போம். தமிழகத்தில் பாஜக திசை தெரியாத கப்பலாக இருக்கிறது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னுடைய சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவாரா என்பதை கேள்விக் குறியாக உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி என்பது செல்ஃப் எடுக்காத காராக நிற்கப்போகிறது. தமிழகத்தில் பாஜக தனித்து விடப்பட்டிருக்கிறது. பாஜக மக்கள் விரோதிகளின் கட்சியாக நிற்கிறது. மேலும் பாஜகவோடு எடப்பாடி பழனிச்சாமி தவிர வேறு யாரும் கூட்டணிக்கு செல்ல தயாராக இல்லை. யாருக்கு எல்லாம் சிபிஐ வழக்கு இருக்கிறதோ அவர்கள் தான் பாஜகவோடு கூட்டணி சேர்கிறார்கள். அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் தான் பாஜகவோடு கூட்டணி வைக்க தயாராக இருக்கிறார்களே, தவிர வேற யாரும் கூட்டணி வைக்க தயாராக இல்லை. தமிழகத்தில் நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜக மிகப்பெரிய பாதாள குழியை நோக்கி சென்று கொண்டிருப்பது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது” என்றார்.