சங்கிக்குழுவில் பராசக்தி குழு - மாணிக்கம் தாகூர் விமர்சனம்..!!

 
1 1

சங்கிக்குழுவில் பராசக்தி குழு என்று மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு.. ஆனா ஜனநாயகன் முடக்கப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல். முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடினார். இந்த விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்கள் மற்றும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்பட பராசக்தி படக்குழுவினரும் பங்கேற்றனர்.

ஏற்கெனவே தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிடக்கூடாது என்றெல்லாம் பேசிவந்த மாணிக்கம் தாகூர், த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும் தொடர்ந்து பேசிவருவதால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், பராசக்தி குறித்த மாணிக்கம் தாகூரின் பதிவு தி.மு.க. தலைமையையே சீண்டும் வகையில் இருப்பதாக தி.மு.க.வினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.