"கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்”- ஸ்டாலினுக்கு மாணிக்கம்தாகூர் பதிலடி
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கூறினார்.
தமிழகத்திற்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய நிலையில் எம்பி மாணிக்கம் தாகூர், கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 48 தொகுதிகளில் போட்டியிட்டு 34 தொகுதிகளை வென்றது. 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக 96 தொகுதிகளில் வென்றதால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மைனாரிட்டி அரசு அமைந்தது. 2006ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தவறு”எனக் கருத்து கூறியுள்ளார்.

