மணிப்பூர் விவகாரம் : நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் மீண்டும் நோட்டீஸ்..

 
Parliament

திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடத்தக் கோரி  மீண்டும் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளன.  

மணிப்பூரில் கடந்த 2  மாதங்களுக்கு மேலாக கலவரன் நீடித்து வருகிறது. அத்துடன் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச்செல்லப்பட்டது, 2 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது போன்ற  சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இந்த விவகாரத்தை தீவிரமாக கையிலெடுத்துள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்கவும், விவாதிக்கக்கோரியும்  போர்க்கோலம் பூண்டு வருகின்றன. இதனால் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 2 நாளில்  அலுவல்கள் எதுவும் மேற்கொள்ள முடியாமல் முடங்கியுள்ளன.  மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கமளிக்க வலியுறுத்தி இன்று நாடாளுமன்றத்தில் கூட்டாக போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன. 

manipur

ஆனால் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வாருங்கள் என எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு வலியுறுத்து வருகிறது. இந்தநிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று மீண்டும் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளன. மாநிலங்களவையில் திருச்சி சிவாவும், அதேபோல மக்களவையில் கனிமொழி எம்.பி. ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளனர்.  காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்திருக்கிறார்.