மன்னார்குடி பேருந்து நிலைய கட்டுமான பணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..

 
stalin

மன்னார்குடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  

திருவாரூர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக  தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். அப்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்தார்.  அதன்பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.  அதன்பின்னர் இன்று காலை  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திமுக,  மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமண விழாவில் கலந்துகொள்கிறார்.  இந்த திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்த அவர், அங்கு வாழ்த்துரை வழங்கினார்.  

stalin

பின்னர் தற்போது மன்னார்குடி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த பழைய பேருந்து நிலையத்தை இடித்து, புதிய பேருந்து நிலையம் அமைத்துத் தர வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்தார்.  இதனையடுத்து பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு தற்போது புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  ரூ.  27 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை ஆய்வு செய்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அதிகாரிகளிடம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளின் விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார்.