த்ரிஷா, குஷ்பு, சீரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
த்ரிஷா, குஷ்பு, சீரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.
லியோ திரைப்படத்தில் நடிகர் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், த்ரிஷாவிடம் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில் நடிகை த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது நடிகர் மன்சூர் அலிகான் மீது மான நஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல், பொது அமைதியை கெடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். தாம் பேசியதை எடிட் செய்து த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசியதாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.