அதிமுகவிற்கு ஆதரவாக பரப்புரை: மன்சூர் அலிகான்

 
TN

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட இந்திய ஜனநாயக புலிகள் கட்சி பேச்சுவார்த்தை நடத்துகிறது.

admk

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  தொகுதி பங்கீடு,வேட்பாளர் தேர்வு ,தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக இயங்கி வருகிறது.  இதனால் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  அதிமுகவை பொறுத்தவரை அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

mansoor ali khan

இந்நிலையில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுகல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோரை மன்சூர் அலிகான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக அனைத்து தொகுதிகளிலும் பரப்புரை செய்வேன் என்றும் உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.