"திமுக அழியும் என்று சொன்ன பலர் காணாமல் போய்விட்டனர்" - எம்.பி.,கனிமொழி பதிலடி

 
Kanimozhi

திமுக அழியும் என்று சொன்ன பலர் காணாமல் போய்விட்டனர் என்று பிரதமருக்கு கனிமொழி பதிலடி அளித்துள்ளார். 

kanimozhi

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, மாநில அரசின் நிதி பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது மத்திய அரசுதான்; அயோத்தி ராமர் கோயிலை கட்டியது அறக்கட்டளை தானே தவிர, அரசு அல்ல; தூத்துக்குடி விழாவில் எனது பெயரை கூறுவதற்கு கூட பிரதமர் மோடிக்கு மனமில்லை. அவர்களுக்கு தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கால்வாசிதான் ஒன்றிய அரசு நிதி வழங்குகிறது. 

Kanimozhi

முக்கால்வாசி மாநில அரசு நிதியில் தான் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த திட்டத்திற்கு பிரதம மந்திரி வீடு வழங்கும் 'திட்டம்' என பெயர் வைத்து ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜகதான். பிற மாநிலங்களிலிருந்து வந்து இத்திட்டத்தைப் பார்வையிடும் எம்.பி.க்கள் இதை ஏன் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டம் என குறிப்பிடப்படவில்லை  எனக் கேள்வி எழுப்புகின்றனர். தேர்தலுக்காக தமிழகத்திற்கு சில திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. குலசேகரபட்டினம் ஏவுதளம் திமுகவிற்கு கிடைத்த வெற்றி . திமுக அழியும் என்று சொன்ன பலர் காணாமல் போய்விட்டனர் என்றார்.