மன்னிப்பு கேட்பதில் பல சிக்கல்- ஷோபா கரந்தலஜே

 
டஃப்

தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில்  செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்பதில் சில சிக்கல்கள் உள்ளதாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷோபா கரந்தலஜே: பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மீது தமிழ்நாட்டில்  வழக்குப்பதிவு - என்ன செய்தார்? - BBC News தமிழ்

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,  செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்புக் கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். 

மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு  கோருவதே சரியாக இருக்கும்- சென்னை உயர்நீதிமன்றம்!-central minister shobha ...

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஷோபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். முதலமைச்சரின் கருத்தை பெற்றே, செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்புக் கோரினால் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்ததாக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் கூறினார். அமைச்சர் ஷோபா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதங்களை முன் வைக்க அவர் தரப்பில் அனுமதி கோரப்பட்டதை அடுத்து,  வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 23ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.