தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இல்லத்தரசிகள் கலக்கம்..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னையில் இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 64  ரூபாய் அதிகரித்துள்ளது.  அதன்படி ஒரு சவரன் ரூ.38,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய நாளில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனேயே  இருந்து வருகிறது. நேற்று சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் 64 ரூபாய் அதிகரித்திருக்கிறது.  சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 4,814 -க்கும், ஒரு சவரன் ரூ.38,512 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் இன்று,  சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து, ரூ. 4,822 -க்கு விற்பனையாகிறது. அதேபோல்  சவரனுக்கு ரூ.64 உயர்ந்து , ஒரு சவரன் 38,576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

வெள்ளி

இதனைத்தொடர்ந்து  சென்னையில் நேற்று  ஒரு கிராமுக்கு 80  காசுகள் அதிகரித்து   ரூ.72.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.  இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 72,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்னும் சில நாட்களுக்கு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கும் என்று நகை வியாபாரிகள் மத்தியில் கூறப்படுகிறது.