மாரிமுத்து மறைவு: ஓபிஎஸ் இரங்கல்

 
OPS OPS

மாரிமுத்து அவர்களின் இழப்பு திரைப்படத் துறைக்கு  பேரிழப்பாகும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

tn
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், திரைப்பட இயக்குநரும், திரைப்பட நடிகரும், வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவரும், எதிர்நீச்சல் தொடர்மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தவருமான தேனி மாவட்டத்தைச்  சேர்ந்த திரு. மாரிமுத்து அவர்கள் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். 


திரு. மாரிமுத்து அவர்களின் இழப்பு திரைப்படத் துறைக்கு  பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.