மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ரூ.12 கோடி பறிமுதல்- அமலாக்கத்துறை

 
மார்ட்டின்

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத  ரூ.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Image


கடந்த வாரம் 2 நாட்கள் கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அவரது அலுவலகங்கள்,  ஹோமியோபதி கல்லூரி உள்ளிட்ட மூன்று இடங்களில் கேரளாவில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்றது. 


இந்நிலையில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 22 இடங்களில் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத சுமார் 12 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சோதனையின் போது, ​​பல்வேறு குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வங்கி கணக்கில் உள்ள  ரூ.6.42 கோடியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.