மருது பாண்டியர்கள் நினைவு நாள் - தமிழக அரசு மரியாதை!!

 
tn

மருது பாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு அன்னார்களின் திருவுருவச் சிலைகளுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர் பெருமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

tn

தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்க்கொடி ஏந்திய வீரர்களுள் முக்கியமானவர்கள் மருது பாண்டிய சகோதரர்கள். சிவகங்கை சீமையை ஆண்டவர்களும் சுதந்திர போராட்ட வீரர்களுமான மருது சகோதரர்களை, கடந்த 1801 ஆண்டு அக்டோபர் 24ம் நாள் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். அந்த நாள் ஆண்டுதோறும் மருது சகோதரர்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று அவர்களின் 222 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

tn

இந்நிலையில்  இன்று (24.10.2023) தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், மருது பாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு அன்னார்களின் திருவுருவச் சிலைகளுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.