உச்சத்தில் தங்கம் விலை.. 3 நாட்களில் சவரனுக்கு ரூ. 642 உயர்வு.. இன்று எவ்வளவு தெரியுமா??

 
gold gold

 சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று  அதிரடியாக சவரனுக்கு ரூ. 192  அதிகரித்திருக்கிறது.  கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு  624 ரூபாய் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்னர்  சர்வதேச பங்குச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக,  அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது தங்கம் விலை..   ஒரு நாள் விலை குறைவதும், அடுத்தநாள் விலை அதிகரிப்பதுமாக இருந்து வரும் தங்கம் விலை,  தொடர்ந்து 3வது  நாளாக  இன்றும்  அதிரடி உயர்வை சந்தித்திருக்கிறது.  கடந்த 19 ஆம் தேதி  ஆப்ரணத் தங்கம் விலை சவர்னுக்கு ரூ 128 அதிகரித்து,  ரூ. 38,040 க்கு விற்கப்பட்டது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

தொடர்ந்து  சென்னையில் நேற்று மாலை நிலவரப்படி 22  கேரட் ஆபரணத் தங்கம் அதிரடியாக சவரனுக்கு ரூ. 304 அதிகரித்து , 38, 344 ரூபாய்க்கு விற்பனையானது.    அதனைத்தொடர்ந்து இன்று 3 வது நாளாக 192 ரூபாய் அதிகரித்திருக்கிறது.  இந்த  3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 624 ரூபாய் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  அந்தவகையில்  இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து,   ஒரு கிராம் ரூ.  4,817 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

இதேபோல் சவரனுக்கு ரூ.192 அதிகரித்து   8 கிராம் கொண்ட  ஒரு சவரன் ஆபரணத் தங்கம்   ரூ. 38,536 க்கு  விற்கப்படுகிறது.   அதேபோல்  வெள்ளி விலை மாற்றமின்று விற்பனையாகிறது.   சென்னையில்  சில்லறை வர்த்தகத்தி  ஒரு கிராம் வெள்ளி விலை, இன்று 65 ரூபாய் 90 காசுகளுக்கு விற்கப்படுகிறது.   ஒரு கிலோ வெள்ளி 65,900  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.