“தம்பி விஜயின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்! ” - தவெக மாநாட்டுக்கு வாழ்த்து கூறிய சீமான்..
‘தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும்’என தவெக மாநாட்டிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் இன்றே விழுப்புரம் மாவட்டத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். அதற்கேற்ப மாநாட்டுத் திடலில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்ட அரங்கம், 48 அரங்குகளில் 50,000 இருக்கைகள், 300 குடிநீர் டேங்குகள், 600 நடமாடும் கழிப்பறைகள், 200 ஏக்கரில் 4 பார்க்கிங் மைதானம், 20,000 மின்விளக்குகள், 72 எல்.இ.டி திரைகள், 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், 18 மருத்துவ முகாம்கள் மற்றும் 150 மருத்துவர்கள், 150 மருத்துவப்பணியாளர்கள், 20 ஆம்புலன்ஸ்கள் என பக்கா ஏற்பாடுகளோடு மாநாட்டுத்திடல் தயார் நிலையில் உள்ளது. இதுமட்டுமின்றி பிரத்யேக மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளதோடு, 15,000 தனியார் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநாட்டுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விக்கிரவாண்டியில் குவியத்தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சிமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும்! தம்பி விஜய் அவர்களின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) October 26, 2024
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும்!
தம்பி… pic.twitter.com/VowJCFImVq


