தொழிலாளர் தினம் - ஈபிஎஸ், கனிமொழி வாழ்த்து

 
ttn

மே தினத்தையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ttn

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே 1ஆம் தேதி உலக அளவில் கொண்டாடப்படுவதாகும். இந்தியாவில் சென்னை மாநகரில் 1923-ஆம் ஆண்டில் மெரீனா கடற்கரை மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில், இந்தியாவின் முதல் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. திருவான்மியூர் கூட்டத்தில், சுப்பிரமணிய சிவா மற்றும் எம்.பி.எஸ்.வேலாயுதம் தலைமையில் இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது. 


இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், " உழைப்பினை உரமாக்கி,உலகத்தை இயங்க வைத்து, அர்ப்பணிப்பு மிக்க செயல்களே ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா ஆற்றலின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும்,தொழிலாளர் நலனுக்கும் உரிமைக்கும் அரணாக இயங்கும் அஇஅதிமுகவின் சார்பாக எனது இதயங்கனிந்த மே தினம் நல்வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 


அதேபோல் திமுக எம்.பி. கனிமொழி, சமூகத்தின் அத்தனை மாற்றங்களும் உழைப்பால் நிகழ்ந்தவை. வளர்ச்சி என்னும் சொல்லுக்கு மூலமாக இருக்கும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது நம் கடமை. உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது #MayDay வாழ்த்துகள். என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.