அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை- அரசாணை வெளியீடு
அங்கன்வாடி குழந்தைகள் மைய பணியாளர்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் பணிபுரியும் முதன்மை ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது வாரமும், உதவியாளர்களுக்கு 3-ம் வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 4-வது வாரமும் என பயனாளிகளுக்கு உணவூட்டும் பணிகளுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இந்தாண்டு மே 1ம் முதல் மே 31ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை காலங்களில் முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு அளவை கணக்கிட்டு 24 வேலை நாட்களுக்கு 1200 கிராம் சத்துமாவு கோடை விடுமுறை தொடங்கும் முன்பாகவே வீட்டுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் வழங்க ஏற்பாடு செய்யப்ட உள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.


