மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!!

 
stalin

ரூ.26.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 26 கோடியே 67 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக கட்டடங்கள், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும் 114 கோடியே 48  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

stalin

வருவாய் துறையானது மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவது ஒரு சாமானிய மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூக பொருளாதார திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.  பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பல்வேறு ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல் ,சாதி சான்று, இருப்பிட சான்று வருமானச் சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்கள் வழங்கி வருகிறது.

stalin

அந்தவகையில் திருவண்ணாமலை ,வேலூர் ,திருவாரூர் , ராணிப்பேட்டை ,மதுரை ,திருவண்ணாமலை வேலூர் என மொத்தம் 26 கோடியே 62 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 16 கட்டடங்களை திறந்து வைத்தார்.  மயிலாடுதுறையில் 114 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்டடத்திற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.  6.54 ஏக்கர் நிலப்பரப்பில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 946 சதுர அடி கட்டட பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்களுடன் 63  பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்களை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது.