அமித் ஷா முன்னிலையில் அதிமுகவினர் எடுபிடி போல் இருந்தார்கள் - வைகோ விமர்சனம்!
மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, எடுபிடி போல்தான் இருந்தார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய வைகோ, எக்காரணம் கொண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு 5 நிமிடமாவது வரவேற்று பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
.அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி நீடிக்குமா? கருத்து வேறுபாடு ஏற்படுமா? என்று தெரியவில்லை. பா.ஜ.க.வுக்கு எடுபிடி போல்தான் இருந்தார்கள். அ.தி.மு.க. சார்பில் ஒருவர்கூட பேசவில்லை. அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என கூறினார்.