"நான் விரும்பி அரசியலுக்கு வரவில்லை; நிர்பந்தத்தாலேயே வந்தேன்”- துரை வைகோ

 
durai vaiko durai vaiko

நான் விரும்பி அரசியலுக்கு வரவில்லை, மதிமுகவினர் நிர்பந்தம் செய்ததாலேயே வந்தேன் என துரை வைகோ கூறியுள்ளார்.

மல்லை சத்யா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து நேற்று முதன்மை செயலாளர் பதவியில் இருந்து பதவி விலகினார் துரை வைகோ. இன்று நிர்வாக குழு கூட்டத்தில் மல்லை சத்யா மற்றும் துரை வைகோ பங்கேற்றனர். துரை வைகோ விலகல் குறித்து நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அவரது பதவி விலகலை தலைமை ஏற்காத மதிமுக தலைமை, தீர்மான அறிக்கையில், முதன்மை செயலாளர் துரை வைகோ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாக குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “வைகோவுக்கு மல்லை சத்யா மட்டும் சேனாதிபதியில்லை, அனைவருமே சேனாதிபதி தான். வைகோ தான் மதிமுக, மதிமுக தான் வைகோ. கட்சியை இழிவுபடுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். என் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.. நான் விரும்பி அரசியலுக்கு வரவில்லை. மதிமுகவினர் நிர்பந்தம் செய்ததாலேயே வந்தேன்” என்றார்.