பரபரப்பான சூழலில் கூடிய மதிமுக நிர்வாகக் குழு- 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்

 
ச் ச்

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது. 

வக்ஃபு எதிர்ப்பு முதல் ஆளுநருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வரை..! மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள்

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த பதவி விலகலை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக இன்னும் ஏற்காத நிலையில், இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் துரை வைகோ விலகல் குறித்து நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் கருத்தும் கேட்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

ஆளுநர் ரவியைக் கண்டித்தும், அவரை நீக்கக் கோரியும் ஏப்.26ம் தேதி மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், வக்ப் சட்டத்தை திரும்பப்பெறக் கோரியும் ஏப்.26ம் தேதி மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.