தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியுடன் பொங்கலுக்கு பிறகு பேசப்படும்- வைகோ

 
பா.ஜ.க-வின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும்! – வைகோ அழைப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்புக்கு பின்னராவது ஆளுநர் தன் கடமையை நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இந்துத்துவா சக்திகளுக்கு அந்த தைரியம் இல்லை" - காட்டமான வைகோ | Vaiko slams  governor ravi in nagercoil press meet - Vikatan

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திராவிட மாடல் ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது. சுதந்திர இந்தியாவில் நெருக்கடி நிலையைவிட மோசமான சட்டங்களை பாஜக அரசு கொண்டுவந்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணி, மக்கள் சக்தியைத் திரட்டி நரேந்திர மோடி அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றும். தமிழ்நாட்டில் சகோதரர் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் வெற்றிகரமாக நடைபெறுகிறது. இந்தியாவுக்கே வழிக்காட்டக்கூடிய இடத்தில் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்புக்கு பின்னராவது ஆளுநர் தன் கடமையை நிறைவேற்ற வேண்டும். பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழ்நாட்டை அறிவிக்க வேண்டும். புயல் மழை பாதிப்புகளை சீரமைக்க தமிழ்நாடு அரசு கோரிய நிதியை , மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு ஓர வஞ்சனை செய்கிறது. கோயிலையும் இந்து மதத்தையும் காட்டி தமிழ்நாட்டில் பாஜகவால் ஓட்டு வாங்க முடியாது. தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியுடன் பொங்கலுக்கு பிறகு பேசப்படும்” எனக் கூறினார்.