திமுக கூட்டணியில் அதிருப்தி இருப்பதாக எழுந்த செய்திகள் அனைத்தும் பொய்- வைகோ
திமுக கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை, தமிழ் மக்கள் ஏற்கவும் மாட்டார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை. முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் அரசை தொடர்ந்து நடத்துவார். திமுக கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம். 2026ல் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமளிக்காத வகையில் திமுக அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். திமுகவுடனான கூட்டணியில் அதிருப்தி என எந்த மதிமுக நிர்வாகியும் தெரிவிக்கவில்லை. திமுக கூட்டணியில் அதிருப்தி இருப்பதாக எழுந்த செய்திகள் அனைத்தும் பொய். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2026- ஆம் ஆண்டிலும் ஆட்சியை தொடர்ந்து நடத்துவார்” என்றார்.
-


