“என்னை கொலைகாரன் என பழி சுமத்தி தி.மு.க.விலிருந்து வெளியேற்றினார்கள்” - வைகோ

 
vaiko ttn vaiko ttn

கருணாநிதியை உயிராக நேசித்த நான் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பா.ஜ.க-வின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும்! – வைகோ அழைப்பு

விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மதிமுகவின் அவைத் தலைவர் ஒருவர் ரூ.350 கோடி சொத்தை அபகரித்துக்கொண்டு துரோகம் செய்து விலகினார். 31 ஆண்டுகள் கருணாநிதியை உயிராக நேசித்த தன்னை கொலைகாரன் என பழி சுமத்தி தி.மு.க.விலிருந்து வெளியேற்றினார்கள். ம.தி.மு.க.வை நான் விருப்பப்பட்டு தொடங்கவில்லை. நிலைமை தன்னை அங்கே தள்ளியது. துரை வைகோ அரசியலுக்கு வரக்கூடாது என்று நான் கூறினேன். ஆனால் கட்சியின் 99 விழுக்காட்டினர் வாக்களித்து அவரைத் தேர்ந்தெடுத்தனர். நான் தான் பழிச்சொல்லுக்கு ஆளாகி நிற்கின்றனர். கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தியதால் தான் துரை வைகோ வந்தார். ஆனால் வாரிசு அரசியல் என்ற பழிச்சொல்லிற்கு நான் ஆளாகி நிற்கிறேன். குடும்ப அரசியலை விமர்சித்துவிட்டு வந்த வைகோ, இப்போது தவிப்பில் இருக்கிறேன்” என்றார்.