"நியாயவிலைக்கடைகளில் காய்கறி விற்பனை" - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

 
periya karuppan

அனைத்து காய்கறி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன்  தெரிவித்துள்ளார். 

 கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாக விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவு காரணமாக 2 நாட்களில் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி  கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

tomato
இந்நிலையில் தேனாம்பேட்டை பண்ணை பசுமை அங்காடியில் ஆய்வுக்கு பின் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் தக்காளி விலை கட்டுக்குள் வந்துள்ளது. வெப்பத்தின் தாக்கத்தால் பயிர்கள் கருகியதே  தக்காளி விலை உயர்வுக்கு காரணம். அத்துடன் உற்பத்தி சரிவால் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. தக்காளி விலையேற்றத்தை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . ஓரிரு நாளில் தக்காளி விலை ஏற்றம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். 

tomato

வழக்கமான கொள்முதலை விட 15 சதவீதம் அதிகமாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வு மக்களை பாதிக்கும் என்பதால் விலையை கட்டுப்படுத்த முதல்வர் கூறியுள்ளார். மூன்று முதல் நான்கு நாட்களில் தக்காளி விலை முழுமையாக குறையும். அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.  விலையேற்றம் தொடர்ந்தால், நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.  " என்று குறிப்பிட்டுள்ளார்.